விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் வாலிபரின் உட லுக்கு அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்
விபத்தில் இளைஞர் மூளைச்சாவு
சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ரோடு பசும்பொன் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 25). இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி அம்சரேணுகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவத்தன்று நேற்று முன் தினம் இரவு தங்கப்பாண்டி தனது மோட்டார் சைக்களில் சிவகாசி அருகே உள்ள குகன்பாறைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது விபத்தில் சிக்கிய அவர்ர பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த தங்கபாண்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த தங்கப்பாண்டியன் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் உறுப்பு தானம்
பின்னர் அவரது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படும் என எடுத்துக்கூறி உடல் உறுப்பு தானத்துக்கு அனுமதி கேட்டதாக கூறப் படுகிறது. இதை தொடர்ந்து தங்கப்பாண்டியன் மனைவி அம்சரேணுகா மற்றும் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தங்கப்பாண்டியனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இதனையடுத்து தங்கப்பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அப்போது சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, தாசில்தார் வடிவேல் மற்றும் அதிகாரிகள், உற வினர்கள், நண்பர்கள், அரசியல்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.