
திருமணம் ஆன புது மணப்பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் மாவட்டம், வடக்காணந்தல் இடத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் இவருக்கு வயது 25. இவருடைய மனைவி பரமேஸ்வரி வயது 19.
திருமணமான புது தம்பதிகளை காண, மாபிள்ளையின் தந்தை அவர்களது வீட்டிற்கு சென்று உள்ளார் அப்போது பரமேஸ்வரி தூக்கில் தொங்கிய வண்ணம் இருந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்
மேலும் தன்னுடைய மகன் வெற்றிவேலும் தற்கொலைக்கு முயன்று சுய நினைவு இன்றி கிடந்துள்ளார்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 27 ஆம் தேதி தான் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும், திருமணத்தில் மணமகளுக்கு விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து உள்ளதாகவும், மேலும் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தான் அந்த பெண் திருமணம் செய்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருமே தற்கொலை செய்துக்கொள்ள என்ன காரணமாக இருக்கும் என சரியாக தெரியவில்லை.
மேலும், வெற்றிவேலின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
இந்த சம்பவம் இருவீட்டாரையும் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.