உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம்.... போன் நம்பர் 97104 44442! விஷால் அதகளம்

 
Published : May 05, 2018, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம்.... போன் நம்பர் 97104 44442! விஷால் அதகளம்

சுருக்கம்

neet help vishal

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களில் பயணச் செலவு உணவு மற்றும் தாங்கும் இடத்தை ஏற்பதாக

மாணவர்களே உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன், என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் எண் : 97104 44442 " எனத் தெரிவித்துள்ளார் விஷால்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதி உள்ளவர்கள் செல்வார்கள் இல்லாத ஏழை பிள்ளைகள் எப்படி பயணம் செய்வது என்று தெரியாமல் திணறி வருவதால் முன்னணி நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என ஆளாளுக்கு  மாணவர்களுக்கு செலவு செய்ய முன்வந்துள்ளனர்.

இன்று ட்வீட் போட்ட தினகரன், கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேரளாவிற்று தேர்வெழுத செல்லும் மாணவர்களுக்கு உதவுவதாக அறிக்கை விட்டார்.

இதனையடுத்து, நடிகர் பிரசன்னா இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் அல்லது வசதி இல்லாத மாணவர்களில் குறைந்தது 2 பேரின் பயண செலவை ஏற்க விரும்புகிறேன். ஹால் டிக்கெட், தேர்வு மைய விபரங்களை எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள், உங்களுக்கு டிக்கெட் புக் செய்கிறேன் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீட் தேர்வு எழுத்தும் மாணவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி போக்குவரத்து, தாங்கும் இடம் மற்றும் உணவு என மாணவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் 9894777077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்தத் தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன்.

என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் எண் : 97104 44442 " எனத் தெரிவித்துள்ளார் விஷால்.  விஷாலின் இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்