சனாதனத்தை எதிர்க்கும் திமுக அமாவாசை நாளில் திட்டத்தைத் தொடங்க நாள் பார்க்கலாமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 4 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவருக்கு கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். "தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்பாக செப்டம்பர் 14ஆம் தேதியே பலருக்கும் பணம் வந்துவிட்டதாக எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது" என்றார்.
உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை
இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டால், முழு அமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர் என்ற அண்ணாமலை, சனாதனத்தை எதிர்க்கும் திமுக அமாவாசை நாளில் திட்டத்தைத் தொடங்க நாள் பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இன்றைய பயணம், திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியான வேடசந்தூர் தொகுதியில், பெரும் மக்கள் திரள் சூழ, வெகு சிறப்பாக நடந்தேறியது. என் சொந்த ஊரான கரூர் பாராளுமன்றத் தொகுதியில்தான், வேடசந்தூர் சட்டசபை தொகுதி வருகிறது. வேட்டை சந்தை - வேடர்கள்… pic.twitter.com/GQgFGoUkDF
— K.Annamalai (@annamalai_k)திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தாலும், மாவட்டத்திற்கு எந்தவித வளர்ச்சியும் வரவில்லை என்ற அண்ணாமலை, பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மேலும் சில அமைச்சர்களுக்கு விரைவில் சோதனை வரும் என்றும் எச்சரித்துள்ளார்.
இலாக இல்லாத அமைச்சராக நீடிக்கும் செந்தில்பாலாஜியை விமர்சித்த அண்ணாமலை, "செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பாஜக மட்டும்தான். அவரை திமுக அரசு பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்" என்றும் கூறினார்.
"திமுக தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரைக் கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கிறார்கள். திமுகவின் வளர்ச்சியே இதுதான் அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றும் அண்ணாமலை குறை கூறினார்.
கம்யூனிஸ்டு கட்சி பாஜகவை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி என்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திமுகவினர் வருமானத்திற்காகவே நடத்தப்படுகின்றன என்றும் அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நடைபயணத்தை இன்று பழனியில் நிறைவு செய்ய உள்ளார்.