கோவில்பட்டியில் அரசு வளாக சாலையை சீரமைக்கக் கோரி தள்ளு வண்டியுடன் மண்ணள்ளி போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தாமாகாவினர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் அந்த சாலை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் காயமடைந்த வரும் நிலை உள்ளது. இந்த அரசு வளாக சாலைகளை புதுப்பிக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வரும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், சாலைகளை புதுப்பிக்க வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சேதமடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை மண்ணைப் போட்டு மூடி சரி செய்யும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை
இதற்காக கோவில்பட்டி யூனியன் அலுவலகம் அருகே இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் தள்ளு வண்டியில் மண்ணை போட்டு குழிகளை நிரப்ப வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி தள்ளு வண்டியை பறிமுதல் செய்தது மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.