5 நாட்களாக திறக்கப்படாத வீட்டின் கதவு; உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநரின் உடல் 5 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

man commit suicide and rescue the body after 5 days in thoothukudi district vel

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 37). இவருக்கு திருமணம் ஆகி ஸ்ரீகிரிஷ், லிங்க யோகேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஓட்டுநர் வேலை பார்க்கும் இவர் தனது குடும்பத்துடன் நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவருடைய தாயார் உடல் நலக்குறைவினால் இறந்துள்ளார். தாயாரின் இறுதி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி உள்ளனர். அதன் பின்பு சில நாட்களில் இசக்கிமுத்துவின் மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான இசக்கிமுத்து தனது மனைவி, பிள்ளைகளை கலுவூரில் உள்ள மனைவியின் தாயார் வீட்டில் விட்டுவிட்டு தனது சொந்த ஊரான சொக்கலிங்கபுரம் பகுதிக்கு வந்துள்ளார்.

Latest Videos

சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போனா பேண்ட கலட்ட சொல்றாங்க - பெண் மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்த இசக்கி முத்து வீட்டின் உள்ளே கதவை பூட்டிக்கொண்டு மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று காலையில் திடீரென அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கொடநாடு விவகாரம்; உண்மையை மறைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் - தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார்  தலைமையிலான காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இசக்கி முத்து அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். பின்னர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக இசக்கி முத்துவின் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image