தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பட்டியல் இன பெண் உணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை சாப்பிட விட மறுக்கும் பெற்றோரால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 11 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த 25ம் தேதி முதல் காலை, மதியம் என இரண்டு வேலை அப்பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டு வருகிறது.
இப்பள்ளியில் சமையலறாக அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர் மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், நாவழக்கம் பட்டி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சமையலறாக இருந்து வருகிறார். இவர் அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டு பணி செய்து வருகிறார்.
சென்னையில் 6ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள்
இந்நிலையில் அக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலரின் கால் புணர்ச்சி காரணமாக பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் குழந்தைகள் காலை உணவை சாப்பிடாமல் மறுத்து வந்துள்ளனர். பிரச்சினை கடந்த ஒரு வார காலமாக நிகழ்ந்துள்ளது. மேலும் அவர்களுக்கு சமைத்த உணவை சாப்பிடாமல் பள்ளி மாணவ மாணவிகள் புறக்கணித்து வருவதால் கடந்த ஒரு வாரங்களாக காலை உணவு வீணாகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோன் கிருஷ்டிபாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், எட்டையபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்டோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரியவந்துள்ளது.
விளையாட்டாக மீன் பிடிக்கச்சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் பலி
ஜாதி பாகுபாடு காரணமாக கோவில்பட்டி அருகே காலை முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவை பள்ளி மாணவ, மாணவிகள் புறக்கணித்ததால் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.