ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? டெல்லி நீதிமன்றம் கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Apr 5, 2024, 3:36 PM IST

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதை  பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

Lok Sabha Election 2024 திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் சொத்து மதிப்பு என்ன?

முன்னதாக, போதை பொருள் ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர். இதையடுத்து, சீல் வைத்த வீட்டை பயன்படுத்தக் கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியது. இதற்கு, சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிலளித்தது, இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், வீட்டை பயன்படுத்த அனுமதி அளித்து மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

click me!