நீங்கள் தான் எனக்கு குடும்பம் மாதிரி; வாக்காளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி

By Velmurugan s  |  First Published Apr 5, 2024, 2:40 PM IST

கரூரில் தனது சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கட்டத்தில் தனது தாயின் இழப்பை நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளராக ஜோதிமணி கை சின்னத்தில் போட்டியிடுகிறார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் தனக்கான வேட்பாளர் வாய்ப்பை ஜோதிமணி பெற்றதைத் தொடர்ந்து இந் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் தனது சொந்த கிராமமான பெரிய திருமங்கலம் பகுதியில் ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய வேட்பாளர் ஜோதிமணி: மக்கள் நிறைய பேர் நூறு நாள் வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வேலையும் சாரியக இல்லை. சரியாக சம்பளமும் வருவதில்லை, சிலிண்டர் விலை உயர்ந்து விட்டது. 

இரு பிரிவினரிடையே மோதல்; தடியடி நடத்தி திருவிழாவை முடித்து வைத்த போலீஸ் திண்டுக்கல்லில் தொடர் பதற்றம்

இதுபோன்ற நிலைமைகளை மாற்ற கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சது தான். நான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று கூறி ஓட்டு கேட்க வேண்டியது இல்லை. ஏனென்றால் நான் 4 வருடம் ஒன்பது மாதம் 24 நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். பல நாட்கள் நம்முடைய ஊருக்கு இரவில் தான் வந்துள்ளேன். அந்த அளவுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது.

கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?

என்று பேசிக் கொண்டிருந்த வேட்பாளர் ஜோதிமணி, அம்மா இருந்திருந்தால் பணிச்சுமை தெரிந்திருக்காது என பேச வந்த பொழுது கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேசினார். மேலும் நீங்கள் தான் எனக்கு குடும்பம் போல் இருந்தீர்கள். அதனால் எல்லாருக்கும் நன்றி என பிரச்சாரத்தை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு கண்ணீருடன் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அவருக்கு அங்கிருந்த மக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறினர்.

click me!