கரூரில் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசிய பழனிசாமி; சாரை சாரையாக வெளியேறிய மக்களால் அதிர்ச்சி

Published : Apr 04, 2024, 12:33 PM IST
கரூரில் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசிய பழனிசாமி; சாரை சாரையாக வெளியேறிய மக்களால் அதிர்ச்சி

சுருக்கம்

கரூரில் தேர்தல் பரப்புரையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் மக்கள் சாரை, சாரையாக வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரூர் தோரணக்கல்பட்டி பகுதியில் நேற்று இரவு அதிமுக கரூர் வேட்பாளர் அருண் எல்.தங்கவேலுவை ஆதரித்து, திறந்த வெளி பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வந்து விடுவதாக கூறி 4 மாலை மணியில் இருந்தே கூட்டம் சேரத் தொடங்கியது. 

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்டம், கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள், திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்க்குட்பட்ட மக்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் என்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி மக்களும் வந்திருந்தனர். 

நீங்க மட்டும் தான் பல மொழி பேசுவீங்களா? எனக்கும் தெரியும்பா... இந்தியில் வாக்கு சேகரித்த அண்ணாமலை

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழக எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, மக்கள் சாரை, சாரையாய் வெளியேறினர். 

தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்; காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

தற்போது இந்த காட்சிகள் பெரும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சி மாலை 4 மணி என்று கூறி 2 மணி நேரம் கால தாமதம் ஆனதும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் வசதி எதுவும் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள், அருகில் கடைகள் ஏதும் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைராகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக தலைவருக்கு சரியான ஆலோசனை இல்லை – 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டிய தாடி பாலாஜி!
கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ