கரூரில் ஜோதிமணிக்காக உணர்ச்சிபொங்க பேசிய உதயநிதி; வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்த மேயர்

By Velmurugan sFirst Published Apr 4, 2024, 6:39 PM IST
Highlights

கரூரில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் வெயில் தாங்க முடியாததால் தலை சுற்றி மயக்கம் அடைந்து கீழே விழ முயன்ற கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்.

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 1 கோடியே 60 லட்சம் மகளிர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1 கோடியே 16 லட்சம் பயனாளர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததும் 6 அல்லது 7 மாதங்களில் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் களம்; 12ம் தேதி கோவையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின்

பிரச்சாரத்தில் கலந்து கொள்ள கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். பிரச்சாரம் தொடங்கிய போது நண்பகல் நேரம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும் ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் வாகனம் பின்னால் நின்று கொண்டிருந்த கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், வெயில் தாக்கம் தாங்க முடியாததால் தலை சுற்றி மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் அவரை அங்கிருந்த நிர்வாகிகள் தாங்கி பிடித்து ஓரமாக அமர வைத்து தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.

மாட்டு வண்டியில் சென்று ஸ்கோர் செய்ய நினைத்த தேமுதிக வேட்பாளர்; மாடு மிரண்டதால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

கரூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவான நிலையில் பொதுமக்களுடன் உச்சி வெயிலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலை சுற்றி கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!