தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் யார் யாரென்று இங்கு பார்க்கலாம்.
முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் நியமனம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமனம்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்.
ஊரக வளர்ச்சி செயலாளர் பி.அமுதா உள்துறை செயலாளராக மாற்றம்.