நாம் தமிழர் ஆட்சியில், மீனவர்கள் மீது கை வைப்பவர்கள் கொல்லப்படுவார்கள் - சீமான் ஆவேசம்

By Velmurugan s  |  First Published Oct 20, 2023, 10:55 AM IST

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கை வைப்பவர்கள் கொலை செய்யப் படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது இன்று மட்டும் நடைபெறவில்லை. தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இலங்கை ராணுவமே சுடுகிறது, வலைகளை அறுத்து செல்கிறது, சொல்லமுடியாத சித்திரவதைகள் செய்து வருகின்றனர். ஆனால் இந்திய நாடும், தமிழக அரசும் எதுவும் கேட்பதில்லை. தமிழன் இறப்பது, அவமானப்படுவது என்றால் சகித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். பேசிப் பயனில்லை. ஒருநாள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும். அப்பொழுது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம் அவர்களுக்கே தெரியும்.. கொன்றுவிடுவோம் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 39 உறுப்பினர்கள் வைத்திருக்கும் திமுக கடிதம் எழுதவா வைத்துள்ளனர்? மாநில அரசு என்ன செய்யமுடியும் என்று கேட்க வேண்டாம். நான் முதலமைச்சரின் நாற்காலியில் அமர்ந்த பின்னர் மீனவன் மீது கை வைத்தால் காலையில் கையெழுத்துக்கு பதவி விலகி வந்து விடுகிறேன்.

Tap to resize

Latest Videos

அமைச்சர் கே என் நேருவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; திமுக பிரமுகரால் பரபரப்பு

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்து, திமுக குறைந்தபட்சம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றதேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூட்டணியை விலக்கிருக்க வேண்டும். காங்கிரஸ் தண்ணீர் தரவில்லை என்றாலும் காங்கிரசுக்கு ஓட்டு போடவேண்டும் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நீட்தேர்வில் நூறு சதவீதம் தமிழக மாணவர்களுக்கு என்று தமிழக அரசு குறைந்தபட்சம் செய்ய வேண்டும். 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு என்பது நீண்டநாளாக மாற்றம் வர வேண்டும், மாற்றத்திற்கான வழியே இல்லை. திமுக, அதிமுக மாறி மாறி வருகிறது. நாம் தமிழர் கட்சி வழியாக வந்தே நிற்கிறது. எங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வரவேண்டும், அந்த நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருந்து வருகிறது முதல் கட்சியாக வர எவ்வளவு நேரம் ஆகும். விரைவில் நடக்கும், நிச்சயம் வெல்வோம். மக்கள் ஒருநாள் எங்களைத் தேடுவார்கள். அதுவரை மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்போம். நாம் தமிழர் கட்சி எட்டு கோடி மக்களுடன் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை முழுமையாக நேசித்து, மக்களை நம்பி தனித்து போட்டியிடுவதாக கூறினார்.நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று முடிவு செய்துள்ளோம். ஏறத்தாழ வேட்பாளர்கள் தேர்வு முடிவு பெற்றுவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் அழைத்துப் பேசும்போது எங்கள் கொள்கை முடிவு முடியாது என்று கூறிவிட்டதாகபேசினார்.

காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

ஓட்டிற்காக பணம் வாங்குவதற்கு மக்கள் பழகிவிட்டார்கள். இவை ஒழியவேண்டும், மாறவேண்டும் தற்போது நான் செய்கிறேன், நாளை விஜய் வந்தால் பணம் கொடுக்கமாட்டார். அதை வலியுறுத்தி பேசுவார். எனக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது, அவருக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது பணம் இல்லாமல் வாக்கு செலுத்த முடியும் என்று மக்கள் யோசிப்பார்கள்.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கொடுத்து வெளியே விடுவது நல்லது என்பது தான் என்னுடைய கருத்து. அவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. ஆட்சி முறையே அவ்வாறு தான் உள்ளது. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடமாட்டார். அவ்வாறு போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்றார்.

click me!