ஒருத்தரை விடாமல் ரவுண்டு கட்டி அடித்த சவுக்கு சங்கர்..! திடீரென டுவிட்டர் பக்கம் முடக்கம்.. பின்னனி என்ன..?

By Ajmal Khan  |  First Published Jul 5, 2022, 4:07 PM IST

தமிழக அரசியல் பிரபலங்களை தனது டுவிட்டர் பக்கம் மூலம் விமர்சித்து வரும் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 
 


ஓட்டு கேட்பு வழக்கில் சங்கர் கைது

தமிழக அரசியல் பிரபலங்களாக உள்ள கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின்,  ஓபிஎஸ், இபிஎஸ், அண்ணாமலை  என அனைவரையும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருபவர் சவுக்கு சங்கர். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர், இவர்  2008 ஆம் ஆண்டில்  நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் சங்கர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

Tap to resize

Latest Videos

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்

அரசியல் தலைவர்களை விமர்சித்த சவுக்கு சங்கர்

இதனையடுத்து வெளிப்படையாக தனது கருத்துகளை சமூக வலை தளத்தில் கூற தொடங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளின் ஊழல்கள் தொடர்பான கட்டுரைகள், நக்கீரன் காமராஜ், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் மீதான ஊழல் தொடர்பான புகார்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பல்வேறு அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சித்தும் வந்தார். தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆதரவாக இருப்பதாகவும், இதற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொடர்பு இருப்பதாக புகார் கூறியிருந்தார். இந்த தகவல் வெளியான நிலையில் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி, காயத்திரி ரகுராம் ஆகியோர்களையும்  சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். பாஜகவில் ரவுடிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

"லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

டுவிட்டர் பக்கம் முடக்கம்

கடந்த 2, 3 தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பரபரப்பாக பேசிவந்தவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்பை விமர்சித்து வந்தார். இதற்கு ஜெயபிரதீப் ஆதரவாளர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் சவுக்கு சங்கரை திட்டி வந்தனர். இது போன்று பலரும் சவுக்கு சங்கர் டிவிட்டர் பக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்தனர். ஒரு சிலர் டிவிட்டருக்கு சவுக்கு சங்கர் தொடர்பான் புகார்களையும்  அனுப்பியிருந்தனர். இந்தநிலையில் இன்று சவுக்கு சங்கர் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் உத்தரவை அடுத்து சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் கடந்த காலங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது, இதையடுத்தே  சவுக்கு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இருந்த போதும் உறுதியான தகவல் தெரியாத நிலைதான் உள்ளது. மீண்டும் சவுக்கு சங்கர் தனது பக்கதை திரும்ப பெற முயற்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்

 

click me!