அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

By Raghupati R  |  First Published Jul 5, 2022, 3:15 PM IST

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  இன்று முதல் 7ஆம் தேதி வரை வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் . வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும்  மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

click me!