கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- பயணிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது - போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை !
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ச்சி 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலிபணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அட கடவுளே... 9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேற்று முதல் 6-ம் தேதி வரையில் மாலை 5 மணி வரை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.