அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

By vinoth kumar  |  First Published Apr 30, 2022, 1:04 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த 23ம் தேதி மஞ்சள் கயிற்றால் தாலி கட்டி உள்ளார்.


தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த 23ம் தேதி மஞ்சள் கயிற்றால் தாலி கட்டி உள்ளார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், நேரடியாக பள்ளிக்கு சென்று  தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். இரு மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேசிய தலைமையாசிரியை இருவரையும் எச்சரித்து அனுப்பினார். 9ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் மீது இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!