மகனுக்கு பெண் கிடைக்காததால் தம்பதி தற்கொலை… தாயின் கல்லறையில் விசம் அருந்தி தற்கொலை செய்த மகன்…!

By manimegalai a  |  First Published Sep 30, 2021, 5:31 PM IST

கிருஷ்ணகிரி அருகே கடந்த ஒன்பது நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுடுகாட்டில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி அருகே கடந்த ஒன்பது நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுடுகாட்டில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்த் முருகேசன், சாந்தாமணி தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திருப்பூரில் வேலை செய்து வந்த இரண்டாவது மகன் சூர்யா, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் மூத்த மகன் ரவீந்திரனுக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருமண வயது வந்தும், பெண் கிடைக்காததால் முருகேசன் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் இருந்த முருகேசன் – சாந்தாமணி தம்பதி கடந்த 21-ஆம் தேதி, கீழ்குப்பம் சுடுகாட்டில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்த, மூத்த மகன் ரவீந்திரன் மனமுடைந்து காணப்பட்டார். வீட்டுக்கே வராமல் வெளியூரில் தங்கியிருந்த ரவீந்தரனை சமாதானம் செய்ய உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்களவில்லை. செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்ததால் உறவினர்களால் அவரை அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றிரவு தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற ரவீந்திரன் அங்கு மதுவில் விசம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலையில் ரவீந்தரன் சுடுகாட்டில் சடலமாக கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ரவீந்திரன் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து விசம் அருந்தி தற்கொலை செய்தது கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!