சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரன உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஓசூர் அருகே அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கோரிமா (27). 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களாக உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்த கோரிமா, அங்குள்ள அக்குபஞ்சர் மையத்தில் முருகேசன் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரன உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடிரைந்த போலீசார் ரியாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு முருகேசன் தலைமறைவானார். மருத்துவத்துறையினர் காவல்துறை உதவியுடன் முருகேசனின் மெடிக்கல் சென்டரின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர். இதில் அவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள், ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்து மருந்து கடைக்கு சீல் வைத்தனர். தலைமறைவான முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.