ஓசூரில் கொரோனா நோய் தொற்றுக்கு சகோதரிகள் 3 பேர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரில் கொரோனா நோய் தொற்றுக்கு சகோதரிகள் 3 பேர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் சகோதரிகளான ஜீவா, வசந்தா, கலா ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தாவின் மகன் லோகேஷ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது, வசந்தாவும் அவரது சகோதரிகளும் அடிக்கடி லோகேஷை பார்த்து நலம் விசாரித்து வந்திருக்கிறார்கள்.
இதனால், அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று பரவியது. உடனே 4 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தா, கலா, ஜீவா ஆகியோர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனர். லோகேஷ் நோய் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் கலாவின் மகன் பாபுவும் நேற்று உயிரிழந்தார். சகோதரிகள் 3 பேர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஓசூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.