கண்ணை மறைத்த கள்ளக்காதல்... உல்லாசத்துக்காக பெத்த புள்ளைங்களை தவிக்கவிட்டு விபரீத முடிவு எடுத்த ஜோடி..!

Published : Jan 26, 2021, 04:28 PM IST
கண்ணை மறைத்த கள்ளக்காதல்... உல்லாசத்துக்காக பெத்த புள்ளைங்களை தவிக்கவிட்டு விபரீத முடிவு எடுத்த ஜோடி..!

சுருக்கம்

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளியுடன் விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளிக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளியுடன் விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளிக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் குள்ளம்மாள் (42). அங்கன்வாடி பணியாளர். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் குள்ளம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி பழனி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பழனிக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். 

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கேயே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். இதனால் குள்ளம்மாள், பழனி 2 பேரும் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குள்ளம்மாள் பரிதாபமாக இறந்தார். பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் மோகத்தால் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் பாராமல் பழனி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்