ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த கிராமத்தில் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த கிராமத்தில் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சந்தூரில் மளிகை மற்றும் பலகாரக்கடை நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.
அந்த குடும்பத்தை சேர்ந்த 90 வயது முதியவர், கடந்த 2 நாட்களுக்கு முன் காலையும், அவரது 80 வயது மனைவி அன்றிரவும், அவரது 45 வயது மகன் நேற்று முன்தினம் மாலையும் உயிரிழந்தனர். இதனால், கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிராம பஞ்சாயத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிப்பதாக முடிவு செய்தனர்.