கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் இன்று காலை துணி துவைத்து விட்டு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் காயவைத்துள்ளார்.
ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் இன்று காலை துணி துவைத்து விட்டு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது, 3 பேரும் துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.