அதிகரிக்கும் காலரா.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

By Raghupati RFirst Published Jul 5, 2022, 4:00 PM IST
Highlights

கடந்த 2 வாரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

காலரா நோய் 

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் குடிநீரில், கழிவு நீர் கலந்ததன் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநள்ளாறு நெடுங்காடு கோட்டுச்சேரி டி.ஆர். பட்டினம், அம்பகரத்தூர் பூவம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் ஜிப்மர் மருத்துவ ஆய்வு குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 

கடந்த 2 வாரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் கடந்த இரண்டு வாரங்களில் 700 பேர் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு காலரா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

காரைக்கால் 

இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது.காலரா நோய் பரவல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சியர் முகமது மன்சூர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் தீவிரத்தை கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சோளிங்கநல்லூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய போது, ‘புதுச்சேரியில் இதுவரை 39 பேருக்கு காலரா இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை  கண்காணித்து வருகிறோம். 

குறிப்பாக  நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நேற்று சென்ற சுகாதாரத் துறையினர் நேரடியாக அங்குள்ள குடிநீரை ஆய்வு செய்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு,  வாந்தி ஆகியவற்றுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில்  வைத்திருக்க வேண்டும்.புதுவை அருகே இருப்பதால் நோய் பரவும் அபாயம் காரணமாக காரைக்காலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை வலுப்படுத்தி உள்ளோம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

click me!