டிஎஸ்பிக்கே இந்த நிலைமையா.!! ஜீப்பை பறித்தது போலீஸ்? காரணம் என்ன.?

Published : Jul 17, 2025, 01:53 PM IST
police

சுருக்கம்

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்டக் காவல்துறை மீண்டும் வழங்காத காரணத்தால் அலுவலகத்திற்கு நடந்தே செல்லும் நிகழ்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Mayiladuthurai DSP vehicle seized : காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகளும், ஒரு சில தவறான அதிகாரிகளும் உள்ளனர். நேர்மையாக பணியாற்றும் அதிகாரிக்கு பல்வேறு வகையிலும் இடையூறு கொடுக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்யை கொடுக்கும். அந்த வகையில்  டிஎஸ்பியின் வாகனத்தை போலீசாரே பறித்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் சாராயம் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

டிஎஸ்பியின் ஜீப் பறிப்பு

தனது அதிரடி நடவடிக்கையால் மதுபான கடத்துபவர்கள் அச்சப்பட்டு வந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், முதலமைச்சர் ஸ்டாலின் சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்துஅமைச்சர் எஸ்கார்டு பணிக்கு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. ஆனால் வாகனத்தை கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்துள்ளார்.

டிஎஸ்பி வாகனத்திற்கு என்ன ஆச்சு.?

இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.ஏற்கனவே டிஎஸ்பி சுந்தரேஷன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியான சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்
ஒரு பயணியையும் அனுமதிக்காதீர்கள்.. சென்னை விமான நிலைய CISFக்கு இண்டிகோ கொடுத்த அதிர்ச்சி கடிதம்