காங்கிரஸ் கட்சியோடு கை கோர்க்கும் பாமக.! திமுகவிற்கு செக் வைத்த அன்புமணி

Published : Jul 17, 2025, 11:39 AM IST
Anbumani PMK

சுருக்கம்

திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம். அன்புமணி ராமதாஸ் திமுக தலைமையை கண்டிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.

Anbumani condemns Trichy Siva comment : சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, ‘‘காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிவா கருத்திற்கு திமுக கண்டனம்

இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். காமராஜர் எளிமைக்கு முற்றிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்பதை உலகம் அறியும் என்றும், திருச்சி சிவாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என செல்வப்பெருந்தகை, ஜோதி மணி ஆகியோர் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி களம் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை. காமராசர் எந்தக் காலத்திலும் ஆடம்பரங்களை விரும்பியதில்லை. முதலமைச்சராகவும், இந்தியாவையே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றிய காமராசர் அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் எளிமையின் வடிவமாகத் தான் வாழ்ந்து மறைந்தார். அதேபோல், காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

காமராஜர் மீதான திருச்சி சிவா விமர்சனம்

அப்படி இருக்கும் போதே கலைஞரின்ன் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று காமராசர் கூறியதாக திருச்சி சிவாவுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை. பெருந்தலைவர் காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் திமுகவினர் தான். அவர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் அவரை களங்கப்படுத்தும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்முடி அவர்கள் , சில சமூகங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவாவும் அதே போன்று பேசுவதிலிருந்தே திமுக எத்தகைய நாகரீகத்தைக் கடைபிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திமுக மன்னிப்பு கேட்கனும்- அன்புமணி

திமுக பொதுக்கூட்ட உரை குறித்து நேற்று இரவு அளித்த விளக்கத்தில் கூட, காமராசர் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறு என்றோ, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவோ திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. அவரை கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. இதிலிருந்தே பெருந்தலைவர் காமராசரை திமுக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பெருந்தலைவர் காமராசர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவா அவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Coimbatore Power Cut: தமிழகத்தில் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்