குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி டிவிட்டரில் #WeWantGroup4Results என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி டிவிட்டரில் #WeWantGroup4Results என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடந்தது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் OMR விடைத்தாளின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலிசெய்து விடுவார் - கடம்பூர் ராஜூ விமர்சனம்
இதை அடுத்து எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் தேர்வர்கள் செய்யும் 16 விதமான பிழைகளையும் சரிபார்க்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நீடித்து வருகிறது. முன்னதாக தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்
எனவே, குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், டிவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.