ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணமா.? அலறி துடித்து மறுப்பு தெரிவித்த தமிழக அரசு

Published : Mar 08, 2023, 03:23 PM IST
ஓட்டுநர்களுக்கு  1000 ரூபாய் நிவாரணமா.? அலறி துடித்து மறுப்பு தெரிவித்த தமிழக அரசு

சுருக்கம்

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000/- நிவாரணம் வழங்கப்படும் என்று  வெளியான செய்தி தவறானது என தெரிவித்துள்ள தமிழக அரசு, பொய்யான தகவலை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000/- நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனை போக்குவரத்து துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000/- வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால்,

தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 27,000 வட மாநிலத் தொழிலாளர்..! விக்கிரமராஜா பரபரப்பு தகவல்

மறுப்பு தெரிவித்த தமிழக அரசு

அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000/- நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப் படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது,

இதையும் படியுங்கள்

கோவையில் தொடரும் கொலை..! ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்- பயத்தில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!