மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு; தாயை தேடி 2 குட்டிகள் பாசப்போராட்டம்

By Velmurugan s  |  First Published Mar 8, 2023, 10:54 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒரே கூட்டத்தைச் சேர்ந்த 3 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் 2 குட்டிகள் இறந்த தாய் யானைகளை சுற்றி வருவதை பார்த்து பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவரது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள்  சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப் பன்றி தொல்லையை கட்டுப்படுத்த தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார கம்பிகளை அமைத்து உள்ளார். 

இந்த மின் கம்பிகள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக  மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார். அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 5 காட்டு யானைக் கூட்டம்  மின்சார ஒயரில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யாணைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

Tap to resize

Latest Videos

திருச்சியில் பயங்கரம்; மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை

அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பின. மேலும் வனத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்திற்கு வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனபகுதிகளுக்கு விரட்டாமல் வனத்துறையினர் போக்கு காட்டியும் அலட்சியமாக செயல்பாட்டதால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னந்தோப்பில் சூதாட்டம்; 3 சொகுசு கார்கள் பறிமுதல், 12 பேர் கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று காட்டு யானையும், அதனை தொடர்ந்து கூலி தொழிலாளி ஒருவரும் மின்சாரம் தாக்கி விவசாய நிலத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்த 3 காட்டு யானைகளையும் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். மேலும்  வனத்துறையினர் விவாசாயி முருகேசனை கைது  செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

click me!