West Nile Virus; கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 வழித்தடங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரம்

By Velmurugan s  |  First Published May 13, 2024, 1:22 PM IST

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் வரக் கூடிய 13 வழித்தடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்துக்களை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியர்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது. செவிலியர்களின் 90 சதவீதம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1412 ஒப்பந்த செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்த அவர்களுக்கு 14,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

Tap to resize

Latest Videos

சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த இருசக்கர வாகனம்; அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து - மதுரையில் பரபரப்பு

ஒப்பந்த செவிலியர்களாக எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகாலமாக நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனர். அந்த வகையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 1912 எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமடுத்தப்பட்டனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10 ஆயிரத்து 969 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு 5,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

இவை அனைத்திற்கும் மேலாக செவிலியர்களைப் பணியிட மாற்றம் கலந்தாய்வு என்பது மிக நீண்ட கால குழப்பமாக இருந்தது அதற்கு. தீர்வு காணும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 ஆயிரத்து 535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர் விரும்புகிற இடத்தில் பணிகளுக்கு சென்று இருக்கிறார்கள். எம்ஆர்பி மூலம் பணி நியமனம் வெளிப்படத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பாக கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள் 2400க்கும் மேற்பட்டவர்களை எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.

அரியலூரில் 17 சவரன் தாலி செயின் பறிப்பு; சாமிக்கே விபூதி அடித்த மர்ம நபர்கள்

மேலும் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய சகோதரர்களுக்கு தமிழக அரசு சார்பில் செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பொது சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.  எல்லாவற்றிற்கும் கொசு தான் காரணம். கொசுவில் இருந்து பரவும் இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளை ஒட்டி இருக்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கேரளாவில் இருந்து 13 வழிதடங்கள் வாயிலாக தமிழகம் வருபவர்களை எல்லையில் கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

click me!