சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! 2 வாரத்திற்கு எந்த புயலும் வர வாய்ப்பில்லை- வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

By Ajmal Khan  |  First Published Dec 8, 2023, 9:43 AM IST

சென்னையை மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் விலகாத நிலையில், மீண்டும் ஒரு புயல் தாக்க இருப்பதாக வெளியான தகவலை தமிழ்நாடு வெதர்மேன் மறுத்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னையை எந்த புயலும் தாக்க வாய்ப்பில்லையென கூறியுள்ளார். 


சென்னையை புரட்டி போட்ட புயல்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடந்த வாரம் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த பாதிப்பு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கையில இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை மக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வகையில் மீண்டும் ஒரு புயல் சென்னையை நோக்கி வருவதாக்கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மறுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தியில், 

pic.twitter.com/liUQUeU0Jk

— Tamil Nadu Weatherman (@praddy06)

Tap to resize

Latest Videos

2 வாரங்களுக்கு புயல் வராது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிறிய அளவில் தான் மழை பெய்யும், சாதாரண மழைக்கே மக்கள் பீதி அடையும் நிலை உள்ளது. இது மக்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட செய்யலாம்.  இந்தநிலையில் அடுத்த 2 வாரங்களில் சென்னையைத் தாக்க எந்தப் புயலும் வராது. அடுத்ததாக 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு. அதனை இன்னும் உறுதிப்படுத்த இன்னும் அதிக நாட்கள் உள்ளது. எனவே இப்போதைய நிலையில் நிவாரணப் பணிகள் தான் முக்கியம்.  அதே நேரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்யும்.

ஜனவரி வரை வடகிழக்கு பருவமழை

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும்.  திருச்சி பெரம்பலூர், கரூர், டெல்டா பெல்ட் போன்ற உள்பகுதிகளிலும் மழை பெய்யும். வடக்கு உள்பகுதிகளைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும். மேலும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, குன்னூர், ஈரோடு பகுதியில் மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் ஈரப்பதத்துடன் கேரளாவிலும் நல்ல மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

Breaking news : செங்கல்பட்டு, ஆம்பூரில் திடீர் நில நடுக்கம்.! வீட்டில் இருந்து வெளியே ஓடிய பொதுமக்கள்
 

click me!