Chennai Floods: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

By vinoth kumar  |  First Published Dec 8, 2023, 8:05 AM IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. தலைநகர் சென்னை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. தலைநகர் சென்னை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.  வீடுகளுக்கு வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. 

Latest Videos

இதனையடுத்து துரிதமாக அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டதால் மெல்ல மெல்ல தலைநகர் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும், நியாய விலைக் கடைகளுக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு எதுவாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுபாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி. மேற்படி 4 மாவட்டங்களில் மட்டும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வெள்ளிக் கிழமையான இன்று பணி நாளாக அறிவிக்கப்பபட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய ரேஷன் கடைகளுக்கு வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!