சென்னையில் வந்து நின்னு விளையாடப்போகுதாம்...! உஷாராக இருக்க எச்சரிக்கை...!

By Asianet TamilFirst Published Aug 20, 2019, 2:18 PM IST
Highlights

வலிமண்டலத்தின்  மேலடுக்கில் ஏற்ப்பட்டிருக்கும் காற்றுச்  சுழற்ச்சி காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் விழுப்புரம், உள்ளிட்ட வட மாவட்டங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது

அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் சென்னையில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

இன்று சென்னையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், வலிமண்டலத்தின்  மேலடுக்கில் ஏற்ப்பட்டிருக்கும் காற்றுச்  சுழற்ச்சி காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் விழுப்புரம், உள்ளிட்ட வட மாவட்டங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது  என்றார். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழையாக திருச்சியில் 13 செ.மீ., கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 8 செ.மீ. பெரம்பலூரில்  7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.கடந்த ஜின் மாதம் முதல் தற்போதுவரை  தமிழகத்தில் 18 செ.மீ. மழையும் சென்னையை பொருத்தவரையில் 33 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம். இது இயல்பை விட 5 செ.மீ. அதிகம்", என தெரிவித்துள்ளது.
 

click me!