வெதர்மேன் புது அறிவிப்பு ...! மழை இப்படிதான் வருமாம் ...

Nov 10, 2017, 4:05 PM IST



கடந்த ஒரு மாத  காலமாகவே  தென்மேற்கு மற்றும் வட கிழக்கு  பருவ மழையால்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக  மழை பெய்தது .இதன் தொடர்ச்சியாக  தற்போது மீண்டும்  இரண்டு நாட்களுக்கு  மழை இருக்கும் என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

இந்நிலையில்  வடகிழக்குப் பருவமழை குறித்த அறிவிப்பு   (தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து)

கடலூர் முதல் டெல்டா பகுதி வரை

கடலூர் மாவட்டம் முதல் டெல்டா பகுதிவரை இன்று நல்ல மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா பகுதிகள், கடலூர், காரைக்கால், நாகை , திருவாரூர் மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும். இந்த பகுதிகளில் மழை பொழிவதற்கு ஏற்றவகையில் மேகக்கூட்டங்கள் அடுக்கடுக்காக இருக்கின்றன.

சென்னையில் இன்று..

சென்னையின் வடகிழக்குப்பகுதியில் நல்ல மேக்கூட்டம் உருவாகி இருப்பதால், சென்னையில் இன்று மழை பெய்யும். வடகிழக்குப்பகுதியில் உருவாகியுள்ள மற்றொரு ேமகக்கூட்டம், சென்னையைவிட்டு சிறிது தூரத்திலேயே இருக்கிறது. அந்த மேகக்கூட்டங்கள் சில நேரங்களில் வலுவிழந்து செல்லவும் வாய்ப்புண்டு. இருந்தாலும் தொடர்ந்து அதை காண்காணிப்பது அவசியம். ஒருவேளை நமக்கு அது சாதகமாகமாறி மழையைக்கூட கொடுக்கலாம். அது குறித்து மீண்டும் பதிவிடுகிறேன். ஆனால், காற்றின் திசை நமக்கு சாதகமற்று இருக்கிறது. 

சென்னையில் வரும்நாட்கள்….

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் மழைக்காக காத்திருக்க வேண்டும். இன்று காலையில் பெய்ததைதப் போல் சில நேரங்களில் சென்னையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யலாம். ஒருவேளை மழை மேகங்கள் காற்றால் உந்தி தள்ளப்பட்டால், இன்று பெய்ததைப் போல் நாளையில் இருந்து கூட சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த வார இறுதியில் நமக்கு மழை இருக்கிறது. 

ராடார் பதிவுகளைப் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த பதிவில் மேகக்கூட்டங்கள் எப்படி செல்கின்றன என்பது குறித்து தெரிவித்தேன். இந்த மேகங்கள்தான், இப்போது சென்னையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மழையை தரப்போகின்றன. சென்னையின் மற்ற பகுதிகளுக்கு சாரல் மழை அல்லது மிதமான மழையையையோ கொடுக்கலாம்.