ஊழல் பேர்வழிகளை புறம் தள்ளி நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம்: அண்ணாமலை

By SG Balan  |  First Published Mar 16, 2024, 7:34 PM IST

தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்


மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் ஊழல் பேர்வழிகளை புறம் தள்ளி, நம்பிக்கையுடன் நாடளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரதநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.

பொன்முடி அமைச்சராவது பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: சத்யபிரதா சாஹூ

நம் தேசத்தின் அடுத்த பாரதப்பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தேர்தலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் பணிவாக வேண்டுகிறேன். 

100 வயதைக் கடந்த 2.18 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் தேர்தல், சுமார் 1.82 கோடி புதிய வாக்களர்கள் பங்கு பெறப்போகும் தேர்தல், நாட்டின்  47.10 கோடி பெண்களும், 49.70 கோடி ஆண்களும் வாக்களிக்கும், சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கும்  மிகப் பிரம்மாண்டமான  தேர்தல். 

சுமார் 55 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல். 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல்திறன் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளும், 85 வயதுக்கும் அதிகமான மூத்த குடி மக்களும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் தேர்தல், மிகவும் பாதுகாப்பான நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.

நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைக்கும் பிரதமர், குடும்ப ஆட்சியை தவிர்த்து, நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைக்கும் பிரதமர், உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டின் பெருமைகளை உயர்த்திய பிரதமர், எழை எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எளிதாகக் கிடைக்கச் செய்த பிரதமர், கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நாட்டின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றிய பிரதமர், புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபின் பெருமை போற்றும் செங்கோலை நிறுவி, நம் தமிழ் மொழியைத் தன் தாயைப்போல நேசிக்கும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து பெருவாரியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டுகிறேன்.

தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில், வரும் 20.03.24 அன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம்.  ஆகவே தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!

click me!