
ஆம், RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் வீடு மற்றும் பிளாட் விற்பனை எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு நிதி சிக்கலிலும்,குழப்பத்திலும் டெவலப்பர் நிறுவனங்கள் மூழ்கியது.
RERA மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால்,கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் கூட விற்க முடியாமல் பல கட்டிட நிறுவனங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்
இந்நிலையில், ரியல் எஸ்டேட் முதலைகள் வீடுகளை விற்காமல் நல்ல விலைக்கு எப்போது விற்க முடியுமோ அப்போதே விற்கலாம்.. என சற்று நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில்,கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்காமல் இருந்தாலும்,அதற்கும் வரி செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.
இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்து வந்த பெரும் அளவிலான மோசடி தவிர்க்கப்படும்
எல்லோருக்கும் வீடு
மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் வீடு என்ற வீட்டுத் திட்டம் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய வர்த்தகப் பிரிவாகத் தற்போது உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கும் சரி, வீடு வாங்குபவர்களுக்கும் சரி அதிகளவிலான சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மலிவான வீடுகள் / சாதாரண வீடுகள்
மலிவான வீடுகள் மூலம் குறைந்த விலையில், வீடு இல்லாதவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வீட்டை வாங்குகின்றனர். இதற்கு மாறாக அடுத்தக் கட்டமாக சாதாரண வீடுகள் இருக்கிறது அல்லவா...?
இது போன்ற வீடுகளை பல நிறுவனங்கள் கட்டி முடித்து கையில் வைத்துள்ளன.
இந்த வீடுகள் குறைந்த விலையில்,சலுகையில் கிடைத்தால் நீங்கள் வீடு வாங்கலாம்
2018 ஆம் ஆண்டில் வீடு வாங்கலாமா ?
இந்த ஆண்டு வீடு வாங்க திட்டம் போட்டுள்ளவர்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து வாங்க பாருங்கள்... காரணம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்றால் போதும் என்ற நிலையில் தான் பல நிறுவனங்கள் உள்ளன. காரணம் கட்டு முடிக்கப்பட்ட வீடுகளை கையில் வைத்துள்ள நிறுவனங்கள்,அதற்கான வரியை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது தான் காரணம்.
எனவே வீடுகள் வாங்க நினைப்பவர்கள் இந்த ஆண்டு தாராளமாக வாங்கலாம் .
வீட்டுக்கடன்
வங்கிகளில் மற்ற கடன்களுக்கான வட்டியை விட வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு என்பதால் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணம்.