ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை வழங்க உயர்நீதிமன்றம் கெடு!

 
Published : Jan 03, 2018, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை வழங்க உயர்நீதிமன்றம் கெடு!

சுருக்கம்

The court of the Tamil Nadu government

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் எவ்விதப் பணபலன்களையும் வழங்காத தமிழக அரசையும் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தையும் கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியத்தை வழங்கவேண்டும். மருத்துவக்காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பிறகு அவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.375 கோடியில் ரூ.179 கோடியை தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் வழங்கியது.

ஆனால், மீதி தொகை வழங்கும் காலம் குறித்து தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மாயாண்டி என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது குறித்து கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள ரூ.204 கோடியை பொங்களுக்குள் அதாவரு வரும் 11 ஆம் தி அன்று தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து வழக்கு விசாரணையை 17 ஆம் தேதி ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!