
கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை எஸ்.பி., பிரவீன் குமார் அபினவ், சிபிசிஐடி-2 எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி எஸ்.பி. ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.