மாணவர்களே நாங்க இருக்கோம்! எங்க மசூதிக்கு வாங்க... உணர்ச்சி பொங்க உதவும் கேரளா முஸ்லிம்கள்!

First Published May 5, 2018, 2:19 PM IST
Highlights
We are students Kerala Mosques to Help Emotionally Come to Our Masjid


நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு முஸ்லிம்கள் தங்களது மசூதியில் இடமளித்துள்ளது, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் போதுமான போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்காததால் தமிழக மாணவர்கள் பலருக்கு நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிரமங்களை சந்திக்காமல் இருக்க தமிழக மக்கள் ஏழை மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டுகின்றனர்.

தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர் என தெரியவந்து உள்ளது. மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுதுகின்றனர்.

கேரள மாநிலம் தமிழகத்துக்கு அருகில் இருந்தாலும் தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் தமிழக மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கேரளாவில் வாழும் தமிழர்கள் பலரும் தமிழக மாணவர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ள நிலையில் நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகளை கேளர மக்கள் செய்துவருகின்றனர்.

அதேபோல, கேரளா, எர்ணாகுளம் மசூதியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், ஓய்வெடுப்பதற்காகவும், ஒருநாட்களுக்கு முன்பாக செல்லும் மாணவர்களுக்கு தங்குவதற்கு முஸ்லிம்கள் தங்களது மசூதிகளில் இடமளித்துள்ளனர்.

தேர்வேழுதவரும் தமிழக மாணவர்களுக்கு முஸ்லிம்கள் தங்களது மசூதியில் இடமளித்துள்ளது, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

click me!