
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், எந்த எரிவாயுவையும் தமிழகத்தில் நாங்கள் எடுக்கவில்லை என புது வெடியை போட்டுள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து நெடுவாசல் மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.
இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனம் தான் தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் ஷேல் எரிவாயுவோ, நிலக்கரி, மீத்தேன் எரிவாயுவோ நாங்கள் எடுக்கவில்லை.
கடந்த 50 ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஓ.என்.ஜி.சி மூலம் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
எந்த பகுதியிலும் விவசாயம் பாதிக்கபடுவதற்கான அறிகுறி இதுவரை இல்லை.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓ.என்.ஜி.சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
5 நிதியாண்டில் 1816.43 கோடி வரி தமிழக அரசுக்கு செலுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் எந்த எரிவாயுவையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எடுக்கவில்லை.
எங்கள் நிறுவனம் செயல்படும் இடங்களில் ஒரு சிலரால் பரப்பபடும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.