
நியாய விலை கடைகளில் எண்ணெய், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், போதுமான இருப்புகள் ரேஷன் கடைகளில் இல்லையா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ரேஷன் பொருட்கள் விநியோகப்பதில் எவ்வித தொய்வும் ஏற்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
நியாய விலை கடைகளில் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
உள்நோக்கத்துடன் பொது விநியோக திட்டங்கள் குறித்து சிலர் வதந்திகளை பரப்புகின்றனர்.
அனைத்து விலையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்படும். பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும்.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாது.
மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போது ஜெயலலிதா அரசு மானியத்தொகை 1,800 கோடி ரூபாயை ஏற்றுகொண்டது.
உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகிய இரண்டும் செயல்படுத்தபடுகிறது.
அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அரிசிக்கு பதில் கோதுமையும் விலையில்லாமல் வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.