
முறையாக நோட்டீஸ் கொடுத்துதான் போராட்டம் நடத்துகிறோம் எனவும் திடீர் என்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவில்லை என்றும்சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு சவுந்திரராஜன் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து, பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் முறையாக நோட்டீஸ் கொடுத்துதான் போராட்டம் நடத்துகிறோம் எனவும் திடீர் என்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவில்லை என்றும்சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு சவுந்திரராஜன் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.