பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது ஐந்து பேர் பேருந்தில் ஏறி நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பணப் பையையும் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த பெண் பயணியை அவர் விரும்பிய நிறுத்தத்தில் இறக்கிவிடாத நடத்துநர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த இந்தச் சம்பவம் பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளில், தாக்குதல் நடத்தியவர்கள் நடத்துநரை ஆவேசத்துடன் குத்துவதைக் காணலாம். நடத்துநர் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதும், தாக்கியவர்களை நிறுத்துமாறு கெஞ்சுவதும் வீடியோவில் காணப்படுகிறது.
நெரிசலான பேருந்தின் உள்ளே நடத்துனரை 4-5 பேர் தொடர்ந்து தாக்குகிறார்கள்.. சில பயணிகள் அதிர்ச்சியுடன் இந்தத் தாக்குதலை வேடிக்கை பார்கிறார்கள். இன்னும் சிலர் அவரைத் தாக்கியவர்களைத் தடுத்து தாக்குதலை நிறுத்த முயற்சி செய்வதையும் வீடியோவில் காணமுடிகிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: முற்றுகையைத் தடுக்க பேரணிக்கு தடை, எல்லையில் பலத்த பாதுகாப்பு
தாக்கப்பட்ட பேருந்து நடத்துநரின் பெயர் மூக்கையன் என்று கூறப்படுகிறது. வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் முன் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், பெண் பயணிக்கும் நடத்துநருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சத்திரம்-துவாக்குடி வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்பட்டது. நடத்துநர் அந்தப் பெண்ணை அவர் இறங்க விரும்பிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது ஐந்து பேர் பேருந்தில் ஏறி நடத்துநர் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்கியவர்கள் நடத்துநரிடம் இருந்து பணப் பையையும் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பேருந்தில் இருந்த சில பயணிகளால் நடத்துநர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தன்னைத் தாக்கியவர்கள் மீது நடத்துநர் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கிய அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மின்சார வாகனங்களுக்கான மானியம் 11,500 கோடியாக உயர்வு! ரூ.1,500 கோடி கூடுதல் மானியம் அறிவிப்பு!