சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரசித்தபெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் வாசலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாளன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரசித்தபெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் வாசலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் மர்ம நபர், கையில் வைத்திருக்கும் கேனிலிருந்த பெட்ரோலை தீயில் ஊற்றிக் கொண்டே இருக்கிறார். இதனால் கோயில் வாசலில் தீ மள மளவென்று கொழுந்து விட்டு எரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
undefined
இதையும் படிங்க: புருஷனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
இதுகுறித்து தகவலறிந்தும் மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: வெற்றி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! மகன் உடலை மீட்டவர்களுக்கு சொன்னபடி ஒரு கோடி சன்மானம்..!
இந்நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு ெபட்ரோல் ஊற்றி தீ வைத்தத வழக்கில் தலைமறைவாக இருந்தத தயாளன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்லாவரத்தை சேர்ந்த இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தனது வீட்டையே தீ வைத்து கொளுத்தியவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.