அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.. வெளியான பகீர் தகவல்..

By Raghupati RFirst Published Feb 12, 2024, 8:48 PM IST
Highlights

திமுகவை சேர்ந்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளசெந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர்பல முறை சோதனை நடத்தினர்.

கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜிவீட்டிலும் கடந்த ஜூன் 13-ம் தேதிஅமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின்நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வரம் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.

தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அவர் தற்போது எங்கு இருக்கிறார், கரூர் வந்தாரா? என்று அவரதுபெற்றோரிடம் விசாரித்தனர்.

அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் , அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

click me!