
பனப்பாக்கம்
வேலூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாத 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக செயல் அலுவலர் மனோகரன், ஆய்வின் போது, உறுதிமொழி ஆணையர் சிவசுதாகரிடம் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
இந்த பணிகளை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாஜிஸ்திரேட்டு மற்றும் ஆணையர் நேரில் பார்வையிடுகின்றனர்.
பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 15 வார்டுகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை உறுதிமொழி ஆணையர் சிவசுதாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு உடனிருந்தார்.
இதேபோல, நெமிலி பேரூராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியையும் உறுதிமொழி ஆணையர் சிவசுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செயல் அலுவலர் மனோகரன், பட்டா மற்றும் அரசு நிலங்களில் அகற்றப்பட்டு வரும் பணிகள் பற்றிய விவரங்களை தெரிவித்தார்.
மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்றாத 16 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக செயல் அலுவலர் மனோகரன் கூறினார்.
அப்போது நெமிலி தாசில்தார் பாஸ்கரன் உடன் இருந்தார்.