பெண்களின் திறமையை வெளிப்படுத்த கோலப்போட்டி, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி; நீதிமன்றத்தில் மகளிர் நாள் விழா…

 
Published : Mar 09, 2017, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
பெண்களின் திறமையை வெளிப்படுத்த கோலப்போட்டி, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி; நீதிமன்றத்தில் மகளிர் நாள் விழா…

சுருக்கம்

Kolappotti womens talents debates peccuppotti Womens Day celebration on the court

வேலூர்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற உலக மகளிர் நாள் விழாவில், பெண்களின் திறமையை வெளிக்கொண்டுவர கோலப்போட்டி, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி போன்றவை நடத்தப்பட்டது.

பெண்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலூர் கோர்ட்டு வளாகத்தில் நடந்த உலக மகளிர் தின விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக மகளிர் தின விழா நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆனந்தி தலைமை வகித்தார்.

தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மதுசூதனன், கூடுதல் மாவட்ட நீதிபதி லதா, வரிவசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நீதிபதி ராஜசிம்மவர்மன், சார்பு நீதிபதிகள் தாமோதரன், அஜீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டி, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பேசினார்.

அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பேசியது:

“ஒரு பெண் சமுதாயத்தில் வளர குடும்பத்தினர் ஒத்துழைப்பு அவசியமாகும். நான் இந்த நிலையில் உயர்ந்துள்ளேன் என்றால் அதற்கு எனது குடும்பத்தினரும் காரணம். மனைவியாக வரும் பெண்ணிற்கு கணவர் அந்த பெண் சமுதாயத்தில் வளர உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்கள் அனைவரும் தங்களது உடல் நலத்தை பேண வேண்டும்.

பல பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கவனிப்பதில் உள்ள அக்கறை தன்னை கவனிக்க மறந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் உடலளவில் சோர்ந்து விடுகின்றனர்.

பெண்கள் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்கள் தங்களுடன் வேலை பார்க்கும் சக தோழிகளுடன் பழகி மனம் விட்டு பேசி நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பல பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்களது திறமைகளை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும். மேலும் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், பார் அசோசியேசன் தலைவர் சேரலாதன், வழக்கறிஞர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் கேசவன், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கலைஞர் அரசு போக்குவரத்து கழகமாகும் அரசு போக்குவரத்து கழகம்..? பகீர் கிளப்பும் எச்.ராஜா