தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%: தொகுதி வாரியாக முழுமையாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்

By SG BalanFirst Published Apr 20, 2024, 7:22 PM IST
Highlights

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) அமைதியாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

Latest Videos

தமிழ்நாடு முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியான அறிவிப்பில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்பட்டது. இரண்டு அறிவிப்புக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது சர்ச்சையானது.

இந்நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இறுதியான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு 3.01 சதவீதம் குறைந்துள்ளது.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம்: (நள்ளிரவு 12 மணி நிலவரம்)

திருவள்ளூர் - 68.31 சதவிகிதம்
வட சென்னை - 60.13 சதவிகிதம்
தென் சென்னை - 54.27 சதவிகிதம்
மத்திய சென்னை - 53.91 சதவிகிதம் (குறைந்தபட்ச வாக்குப்பதிவு)
ஸ்ரீபெரும்புதூர் - 60.21 சதவிகிதம்

காஞ்சிபுரம் - 71.55 சதவிகிதம்
அரக்கோணம் - 74.08 சதவிகிதம்
வேலூர் - 73.42 சதவிகிதம்
கிருஷ்ணகிரி - 71.31 சதவிகிதம்
தருமபுரி - 81.48 சதவிகிதம் (அதிகபட்ச வாக்குப்பதிவு)

திருவண்ணாமலை - 73.88 சதவிகிதம்
ஆரணி - 75.65 சதவிகிதம்
விழுப்புரம்- 76.47 சதவிகிதம்
கள்ளக்குறிச்சி - 79.25 சதவிகிதம்
சேலம்- 78.13 சதவிகிதம்

நாமக்கல் - 78.16 சதவிகிதம்
ஈரோடு - 70.54 சதவிகிதம்
திருப்பூர் - 70.58 சதவிகிதம்
நீலகிரி - 70.93 சதவிகிதம்
கோவை - 64.81 சதவிகிதம்

பொள்ளாச்சி -70.70 சதவிகிதம்
திண்டுக்கல் - 70.99 சதவிகிதம்
கரூர்- 78.61 சதவிகிதம்
திருச்சி -67.45 சதவிகிதம்
பெரம்பலூர் - 77.37 சதவிகிதம்

கடலூர் - 72.28 சதவிகிதம்
சிதம்பரம் - 75.32 சதவிகிதம்
மயிலாடுதுறை - 70.06 சதவிகிதம்
நாகப்பட்டினம் - 71.55 சதவிகிதம்
தஞ்சாவூர்- 69.18 சதவிகிதம்

சிவகங்கை - 63.94 சதவிகிதம்
மதுரை - 61.92 சதவிகிதம்
தேனி - 69.87 சதவிகிதம்
விருதுநகர் -70.17 சதவிகிதம்
ராமநாதபுரம் -68.18 சதவிகிதம்

தூத்துக்குடி - 59.96 சதவிகிதம்
தென்காசி - 67.55 சதவிகிதம்
திருநெல்வேலி - 64.10 சதவிகிதம்
கன்னியாகுமரி - 65.46 சதவிகிதம்

click me!