தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கொளுத்தும் வெயிலில் வாடும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் குளுகுளுவென்று ஒரு நல்ல செய்தியைக் கூறியுள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
கோடை வெயில் நாளுக்கு நாள் வாட்டி வைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் தினசரி வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து இளைப்பாற பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ஆறுதல் அளிக்கும் செய்தியைக் கூறியுள்ளது. தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
உங்க மொபைல் ஓவர் ஹீட் ஆகுதா? கண்டிப்பா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளிலெ மிதமான மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் பிற மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிகினியில் ஓடி வந்து பஸ்ஸில் ஏறிய பெண்ணால் பயணிகள் அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!