
வேலூர்
கூடுதல் தொகுப்பூதியம் அரசு ஆணையை அமல்படுத்தக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "இணையதள சான்றிதழ் செலவினம் மற்றும் கூடுதல் தொகுப்பூதியம் போன்றவற்றுக்கு அரசு ஆணை இருந்தும், அதனை செயல்படுத்தாமல் இருக்கும் வருவாய்த் துறை மேல்நிலை அலுவலர்களைக் கண்டித்தும்,
உடனடியாக அரசாணையை அமல்படுத்த வேண்டும்" என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மேலும், ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், கதிரவன், பழனி, சாபுதீன், கமலகண்ணன், மஞ்சுளா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.